சிட்டி ஆயி ஹை..
கடிதம் வந்து விட்டது..
(பங்கஜ் உதாஸின் பிரபலமான ஆயிஹை சிட்டி ஆயிஹையின் தமிழாக்கம்.)
தமிழில்.. இளங்கோவன் தாயுமானவர்
பல காலம் முன்பாகப்
பரதேசம் சென்ற மகன்-`
அன்று ஒரு கடிதம்
அவனுக்கு வந்தது.
உச்சியில் அவன் பேரெழுதி..
உருக்கும் சேதி உள் எழுதி...
விட்டு விட்டு வந்த பூமி
நினைந்தெழுதி வரைந்த மடல் –
விட்டு வந்த மண் மணக்கும்
வீட்டார்தான் அனுப்பிய மடல்-
“ ஏழு கடல் தாண்டிச் சென்றாய்.
உயிரோடேமைக் கொன்று சென்றாய்
அன்பின் பிணைப்பை அறுத்துச் சென்றாய்
அகத்தில் கண்ணீர் நிறைத்துச் சென்றாய்
கொஞ்சமாய் உண்டு , கொஞ்சமாய் உறங்கி
வஞ்சகமே இல்லாமல் நிறையவே அழுகின்றோம்..
ஆல மரத்தில் காலி இடம் , எப்படி விழும் குளத்தில் நிழல்.
அறுவடை முடிந்து பைசாகி..
வரணும் நீ இங்கு அது பாக்கி..
தெருவில் நீஇலா வெறுமை தாக்கும்
தோட்டத்து மலரும் முள்ளாயப் பூக்கும்.
நீயின்றி வரும் தீப ஆவளி..
நெஞ்சில் வலியே விளக்கில் ஒளி..
நீயின்றி வருமே வண்ணமற்ற ஹோலி ..
பீச்சும் குழலோ பாய்ச்சுதே கோலி...
முன்னர் கடிதம் காட்டும் உன் ரூபம்.
இப்போதோ முடிந்ததே ஆட்டத்தின் வேகம்.
பல்லக்கில் ஏறி புக்ககம் செல்லும் முன்
தங்கை உன் சாயல் சாலையில் தேடுவாள் ..
அப்பன் நான். என்னை விடு..
அம்மாவுக்குத்தான் ஆறா வடு..
உன் பத்தினி செய்வாள் சேவை முக்காலம் -
உற்றுப் பார்த்தால் உள்ளே விதவைக் கோலம்..
தேடிய திரவியம் போதும் போதும்.
தேடுதுனை வீடு தினமும் தினமும்
அறியா தேசம் அளந்தது போதும் ..
அகன்று வா. அகன்று வா.
கூண்டினை உடைத்துப் பறவை போலே
பறந்து வா. பறந்து வா..
இன்னும் உனக்கு யவ்வனம் இருக்கு.
திரும்பி வா நம் வீட்டிலும். சாப்பிட. இருக்கு.
டிலும் சாப்பிட இருக்கு..


Comments
Post a Comment