pneumonoultramicroscopicsilicovolcanoconiosis
மாப்பிள்ள மணி வேம்பு அலுவலகத்திற்கு சென்றிருந்தேன்.
உள்ளாட்சி நிதி கணக்குத்துறையில் உதவி இயக்குனராக உள்ள மணி எனது அன்றைய மாணவன். என்ன வாத்தியாரே என்றுதான் அழைப்பான். வயதாகிவிட்டதால் இப்போது மாமா என்று மரியாதையாக அழைக்கிறான். அவன் அண்ணன் அரசு வேம்பு எப்போதும் போல் மாமா தான்.
மணி எனது வலைப்பூவைப் படித்திருக்கிறான்.
pneumono- ultramicroscopic- silico- volcano- coniosis-
மேலே உள்ள முரட்டு வார்த்தை அவனது உபயம்.
நிமோனோ அல்ட்ராமிக்ரஸ்கொப்பிக் சிலிகோ வால்கொனோ கோனியாஸிஸ் என்று உச்சரிக்கப்படும் அந்த வார்த்தை யின் பொருள் இதுதான்.
எரிமலைகள் இருக்கும் மலை அடிவார கிராம மக்களுக்கு சிலிக்கான் துகள்கள் சுவாசத்தில் கலந்து விடுவதால் ஏற்படும் சுவாசத் தொற்று நோய்- இவ்வாறு அழைக்கப்படுகிறது.
நிமோனோ-
அல்ட்ராமைக்ராஸ்க்கோப்பிக் -
சிலிக்கோ -
வல்கோனா -
கோனியாஸிஸ் ..
இந்த வார்த்தையைத்தான் ஆங்கிலத்தில் மிக நீண்ட வார்த்தை என்று ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி அங்கீகரித்துள்ளதாக கேள்வி.
ultracrepedarian என்றும் ஒரு வார்த்தை மணி சொன்னான். தனக்குத் தெரியாததால் எல்லாம் கருத்து சொல்லும் போக்கைக் குறிக்கும் சொல் இது. இதன் பின் ஒரு கதை உள்ளது.
அது - இது..
Latin ultrā crepidam (also suprā crepidam ) “above the sole, beyond the sole,”
“sole of a shoe, shoe, sandal”
கி.மு.360-315 ல் வாழ்ந்த கிரேக்க ஓவியரான Apelles தனது ஓவியம் ஒன்றை அருகில் இருந்த ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் காட்டி அபிப்ராயம் கேட்கிறார். இந்த ஓவியத்தில் உள்ளவரின் காலணிஇன்னும் கொஞ்சம் சரி செய்யப்படலாம் என்று தோழர் சொல்ல அதனை சரி செய்கிறார் ஓவியர். அப்படியே கொஞ்சம் மேலே தொடைப் பகுதியினை டச் அப் பண்ணுங்கள் என்று தோழர் சொல்ல ஓவியர் கடுப்பாகி விடுகிறார். . nē suprā crepidam sūtor jūdicāre “let the cobbler not judge above the sandal”( செருப்புக்கு அபிப்ராயம் சொல்றதோட நிப்பாட்டிக்க, அதுக்கு மேல போகாத ) என்று திட்டி விடுகிறார்.
தோழர் செய்தது போல் நானும் இது மாதிரி சொல்கிறேனே , மாமா Am I an ultracrepedarian?என்று என்னைக் கேட்டிருந்தான்.
இந்தப் பதிவுகள் எழுத ஆரம்பித்ததும் எனக்கே என்மேல் அப்படி ஒரு சந்தேகம் வந்திருக்கு மாப்பிள்ளே..
நாளை தாரூஸரஸ் விளக்கியிருக்கும் spoonerism..
(This teaser is for you maapla manivembu ,
flood me with your contribution on spoonerism!)
`



Comments
Post a Comment