LINGUAPHILE- லின்குவாபைல்
....லிங்குவா பைல் என்பது வார்த்தைகள் மீது ஒருவருக்கு உள்ள காதலைக் குறிக்கிறது.
குமார் எப்பப் பாத்தாலும் இதனை டிங்கோலா என்றுதான் கேலியாகக் குறிப்பிடுவது வழக்கம்.
தாய்த் தமிழில் பல ஆயிரம் வார்த்தைகள் அப்படிக் கொட்டிக் கிடக்கின்றது. இந்தப் பதிவு ஆங்கிலத்தில் என்னை ஈர்த்த சில வார்த்தைகள் பற்றியது.
பத்தாம் வகுப்பு முடித்த பின் கல்லூரியில் சேர புகுமுக வகுப்பு என்று அன்று அழைக்கப்பட்ட PRE UNIVERSITY CLASS .இருந்தது. அப்போது விருப்பப் பாடமாக எடுத்த உயிர் இயல் ஈந்த பலவேறு பெயர்களில் இந்த மூன்றும் இன்னும் நினைவில் டக் டக் என்றுதான் ஒலிக்கிறது..
..ரானா ஹெக்சா தேக்டைலா...(RANAHEXADAKTYLA).. நம்ம தவக்களைதான்..
பெரிபிலாநேடா அமேரிக்கானா (PERIPLANETA AMERICANA) நம்ம கரப்பான்பூச்சி தான்.
ஹைபிஸ்கஸ் ரோசா சைனன்சா (HIBISCUSROSASINENSA) நம்ம செம்பருத்தியும் நந்தியா வட்டையும்தான்.
தில்லியில் அலுவலகத்தில் அடிக்கடி தட்டுப் பட்ட வார்த்தை லிபாபா..(LIFAFA) ஏதோ அராபிய கலிபா போல் கம்பீரமாக ஒலிக்கும் இந்த இந்தி /உருது வார்த்தை அலுவல் உறை ( OFFICE COVER) யின் பெயர்,
SONOROUS EFFECTல் மயக்கும் சில மருத்துவச் சொற்களை என் பணிக் காலத்தில் கண்ணுற்று நினைவில் பதித்துள்ளேன்.
இதயத்தில் உள்ள அடைப்பை எடுக்க செய்யப்படும் ஒரு ப்ரோசிஜர் PERCUTANEOUS TRANSLUMINAL CORONARY ANGIOPLASTY . சுருக்கமாக இதனை PTCA என்பர்.
அது போல் ஒரு அரிய வகை புற்று நோய் பெயர் LANGERHANS CELL HISTIOCYTISITIS,
ஆர்னால்ட சுவாஷ் நிக்கர் என்னும் ஜெர்மானியப் பெயரின் பின் தெரியும் ஆஜானுபாகனைப் போலவேதான் அவரின் பெயருக்கான ஸ்பெல்லிங்கும். ARNOLDSCHWARZENEGGER!
எனது இரண்டாவது மகள் மூலம் நான் சமீபத்தில் ஒரு மிரட்டல் வார்த்தை கேள்விப்பட்டேன்.
ஹிப்போ போட்டோ மான்ச்டோரோசெஸ் க்விப்பிதேலியோ போபியா என்று உச்சரிக்கப்படும்
HIPPOPTOMONSTROSESQUIPEDALIOPHOBIA என்ற அந்த வார்த்தையின் பொருள் ..
நாளைக் காலையில் சொல்கிறேன்..
Comments
Post a Comment