HIPPOPTOMONSTROSESQUIPEDALIOPHOBIA- ஹிப்போ போட்டோ மான்ச்டோரோசெஸ் க்விப்பிதேலியோ போபியா
ஹிப்போ போட்டோ மான்ச்டோரோசெஸ் க்விப்பிதேலியோ போபியா
பண்டிதத்தனத்தை காண்பிப்பதோ அல்லது பயமுறுத்துவதோ இந்தப் பதிவின் நோக்கமல்ல. பிறகு என்ன என்கிறீர்களா? அதைச் சொல்லுமுன் இந்த முரட்டு வார்த்தையின் பொருள் என்னவென்று பார்த்து விடுவோம் .
நீளமான இது போன்ற முரட்டு வார்த்தைகள் மீது ஏற்படும் பயம்தான் "ஹிப்போ போட்டோ மான்ச்டோரோசெஸ் க்விப்பிதேலியோ போபியா". இதனைப் போக்க ஒரே மருந்து இது போல நிறைய வார்த்தைகள் தெரிந்து கொள்ள வேண்டுமாம்.
அது மாதிரி ஒரு மருந்து என் மகளுக்கு அமேசானில் இருந்து போன வாரம் வந்திருந்தது.
மருந்தின் பெயர் "தாரூராசரஸ்"-
டாக்டர் பெயர் - சசி தாரூர்.
அவரேதான் .
அரசியல் மற்றும் தனி வாழ்க்கையில் நமக்குத் தெரியும் அவரது சித்திரத்தில் இருந்து வேறுபட்டு அவரது இந்த இலக்கிய முகம் வசீகரமாகவே இருக்கிறது.
தாரூரின் தெசாரஸ் - தாரூராசரஸ்.
நீள் வாசக அலர்ஜி போக்க அவர் சொல்லும் மருந்து நீள் வாசகங்களை நேசிக்கக் கற்றுக் கொள்வது என்பதாக இருக்கிறது. ஒரு 53 நீள வார்த்தைகளை இந்த புத்தகத்தில் அகர வரிசைப்படி குறிப்பிடும் தரூர் அதற்கான விளக்கங்களை ரசிக்கும்படி சமகால அரசியல் அங்கத நெடி தூவித் தந்துள்ளது சுவ ராஸ்யம்.
அந்தப் புத்தகத்தில் இருந்து இன்று ஒரு வார்த்தை.
FLOCCINAUCINIHILIPILIFICATION..
பிளாசினா சினி ஹிலி பிலி பிகேஷன் ..
இதன் பொருள் " ஒன்றையோ அல்லது ஒருவரையோ - அதனையோ அல்லது அவரையோ - ஒன்றுக்கும் உபயோகமற்றது அல்லது உபயோகமற்றவர் என்பதனை சீர் தூக்கி நிரூபிக்கும் செயல்"
இதனை எப்படி வாக்கியத்தில் கையாளுவது என்று தரூர் சொல்லியிருக்கும் விதம் அருமை ..
" My new book "The Paradoxical Prime Minister" is more than just a 500 page exercise in floccinaucinihilipilification. "
நாளை அடுத்த டோஸ் தருகிறேன்.

Comments
Post a Comment