காண தொலை -18

அட்டாரி கிராமம் ..வாகா எல்லை...

அமிர்த்சர் மாவட்டத்தில் உள்ள அட்டாரி கிராமத்தில் இருந்துதான் NH 1 ஆரம்பிக்கிறது. 

அட்டாரியில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையான வாகா இருக்கிறது.

  தெற்கு ஆசியாவின் புராதன வாழ்வாதரமான கிராண்ட் ட்ரன்க் ரோட் பஞ்சாபில் உள்ள இந்திய பாகிஸ்தான் எல்லையில் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள வளமான பூமிதான் வாகா. இந்தியாவின் மூவர்ணக்  கொடியும் பாகிஸ்தானின் பச்சைக் கொடியும் இங்கு உள்ள இரு நாட்டின் எல்லையில் உள்ள இரட்டைக்  கதவுகளில்  இறுக்கமாக கட்டப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாலையும் இரட்டைக் கதவுகள் பூட்டப்பட்டு மறு நாள் காலையில் கதவுகள் திறக்கப்படுகிறது.வாகா பார்டர் எனப்படும் இங்கு தினமும் மாலையில் , நூற்றுக்கணக்கான மக்கள் இரு புறமும் தத்தம்  நாட்டு எல்லையில் குழுமியிருக்க இரண்டு நாட்டு இராணுவ வீரர்களும் மிடுக்காக நடந்து வந்து, தங்கள்  தேசியக் கொடியினை  இறக்கி விட்டு சிறிது நேரம் இரண்டு நாட்டு எல்லைக் கதவுகளையும் நன்கு திறந்து விட்டு எல்லை தாண்டாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுமாறு செய்கிறார்கள்.. பிறகு இரண்டு வீரர்கள் இருபுறமும் நின்றவாறு ஒருவருக்கொருவர் கிக் சல்யுட் அடித்துக்  கொள்கிறார்கள். கையால் அல்ல. காலால்.  கால் கட்டை விரல் நகம் நெற்றியில்  படுமாறு...

இதில் என்ன சொல்ல வேண்டிய விடயம் என்றால், இங்கிருந்து மிடுக்குடன் நடந்து சென்று இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோட்டில் நிற்கும் ஆறடி உயரமுள்ள  நமது வீரர்,  தனது காலை 360 டிக்ரி மேலே தூக்கி தரையில் ஓங்கி மிதித்து, சீற்றத்துடன் உறுமி, முறைப்பையும் வெறுப்பையும், வெஞ்சினத்தையும் உமிழ்ந்தவாறு மீசையை முறுக்கிக்கொண்டு கடும் கோபத்துடன் எதிரி நாட்டின் இரும்புக் கேட்டினைப்  பார்த்து நிற்பார். சனமெல்லாம் பாரத் மாத கே ஜே என்றும் வந்தே மாதரம் என்றும் தேச பக்தி ஒவ்வொரு செல்லிலும் பெருக்கெடுக்க கோஷமிடும்.

Bordering on drama: (Chapter 2) - The Performance of Nationalism

அதே போல் பாகிஸ்தான் இராணுவ வீரர் நமது எல்லையினை நோக்கி நடந்து வந்து தனது காலை 360 டிக்ரி மேலே தூக்கி தரையில் ஓங்கி மிதித்து, சீற்றத்துடன் உறுமி, முறைப்பையும் வெறுப்பையும், வெஞ்சினத்தையும் உமிழ்ந்தவாறு கோபம் கொந்தளிக்கும் முகத்துடன் அவரது எதிரி நாட்டினைப் பார்த்து நிற்பார். சனமெல்லாம் அல்லா ஹூ அக்பர்  என்றும் பாகிஸ்தான் ஜிந்தாபாத்  என்றும் தேச பக்தி ஒவ்வொரு செல்லிலும் பெருக்கெடுக்க கோஷமிடும். ( நாங்கள் சென்ற போது கனத்த சரிரம் கொண்ட பாகிஸ்தான் பாய் நமது தரப்பு slim ஜவானைப் போல் முழு உயரத்திற்கும் காலைத் தூக்க முயன்று அவரது பெல்ட் பக்கிள் அவிழ, நம் தரப்பு கேலியாக கூச்சலிட அவமானம் மறைத்து அவர் திரும்பி left right போட்டு சென்ற கூத்து நடந்தது.( பாவம், அந்த பாய்க்கு அங்க என்ன பனிஷ்மெண்ட் தரப்பட்டதோ தெரியவில்லை)

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மூன்று போர் மூண்டு முடிந்து விட்டது. பதினேழாயிரம் அடிக்கு மேல் உயரத்தில் மைனஸ் டிக்ரி  குளிரில்  உள்ளங்கால் எல்லாம் பனிக் கடியில் ஓட்டையாகி இருக்க,  கிளேசியர்களில் வீரர்கள் எல்லை காத்து நிற்கிறார்கள்.

உலகில் வேறெங்கும் இப்படி ஒன்றாய் இருந்து பிரிக்கப்பட்ட இரு நாடுகள் இடையே இப்படி ஒரு கடும் கோப தின நிகழ்வு நடக்கிறதா என்று தெரியவில்லை. இரண்டு நாட்டு வீரர்களும் சம்பிரதாயமாகக் கையும் குலுக்கிக் கொள்வார்கள்.

Outlook Photo Gallery : Indian Border Security Force soldier and ...

தினமும் இந்த நிகழ்வு நடக்கும் இடத்திற்கு டூரிஸ்ட் வண்டிகளில் இருந்து மக்கள் வந்து குவிகிறார்கள். இந்திப் படங்களில் வரும்  பிரபல பாடல்களின் மெட்டில் தேசபக்திப் பாடல்கள்  எங்கெங்கும் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஐஸ் கிரிம், சுண்டல், பட்டாணி, தண்ணீர் போத்தல்கள்  விற்கப்படுகிறது. ஒரு  கிரிக்கெட் மேட்ச் பார்க்கப்போகும் சந்தோஷத்தில்  அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள். இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கும் கூட்டம். கசங்கிய யூநிபர்மில் பள்ளிக் குழந்தைகள், ஓடிசலான தேகத்துடன் லேட்டஸ்ட் முடிவேட்டில் உழைக்கும் வர்க்கத்தின் இருபது வயது இளைஞர்கள், தலைக்  குல்லாவில் விடுமுறை ஸ்தலத்தின் பெயர் பொறித்து தட்டுப்படும் பணக்கார இளைஞர்கள்..பழம் தங்க நகைகள் சூடி கிராமிய பாணி உடையில்  சில நூறு அடி தூரத்தில் உள்ள பாகிஸ்தான் கேட் வழியே மங்கலாகத் தெரியும் முகம்மத் அலி ஜின்னாவின் பெரிய படத்தின் கீழ் அமர்ந்திருக்கும் பாரம்பர்ய செர்வானி அணிந்த தாடிக்கார ஆண்களையும் , தனியாக அமர்ந்திருக்கும் பேரழகுப் பெண்கள் வரிசையினையும் பார்த்து “ அவுங்க எல்லாம் வேற  மாதிரி இருக்காங்க இல்ல” என் தமக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

India | The Polemicist

. பிரபல ஆங்கிலப் பத்திரிகையான இந்தியன்  எக்ஸ்ப்ரஸ் இணை ஆசிரியரும் ராணுவ விவகாரங்களில் விற்பன்னருமான சுசாந்த் சிங் இந்த நிகழ்வு தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான குரோத உணர்வைத் தூண்டி விட்டுக் கொண்டே இருக்கிறது என்று கருதுகிறார். அதே போல் பாகிஸ்தானின்  ராணுவ விவகார ஆய்வாளரான முபாசிர் புகாரி “ எல்லையில் பதட்டம் கூடக் கூட இங்கு நிகழ்ச்சியில் ஆக்ரோஷம் கூடிக்கொண்டே போகிறது.  இது பார்க்க ஆக்ரோசமாக இருந்தாலும், வேடிக்கையாகவும் இருக்கிறது. இது ஏதோ வாகா பார்டரில் ஒரு யுத்தம் ஆரம்பித்து விட்டது போல் ஒரு தோற்றம் தருகிறது “ என்கிறார்.


Amritsar – Tourplaces

சுசாந்த் சிங் இன்னும் ஒரு படி மேல் போய் “ இது அர்த்தமற்றது. சினிமா நடிகர்கள்தான் இப்படிச் செய்ய வேண்டும்.  நன்கு பயிற்சி கொடுக்கப்பட்ட ஜவான்களை இப்படி தினம் பயன்படுதுவது தவறு . என்கிறார்.

எது எப்படியோ, தினம் அங்கே கேட்கும் உரத்த தேச பக்திக் கோசங்களுக்கும், கடுமையான முறைப்புகளுக்கும் நடுவே , சில வயோதிகர்கள்.. இந்திய பாகிஸ்தான் பிரிவினையால் திடீரென தங்கள் நிலத்தில் இருந்து பிரித்து வேறு நிலத்தில் விசப்பட்டவர்கள் ஏக்கத்துடன் பழைய நண்பர்கள் தேடி  தொலைவில் தெரியும் அவர்களது பழைய வாசஸ்தலங்கள் தேடி மெல்லிதாக விசும்பிக் கொள்கிறதும் கேட்கத்தான் செய்கிறது..

 


Comments