காண- தொலை 16

 


Pune to Mumbai  Expressway

அது 2002ம் வருடம். மும்பையில் இருந்து புனேக்கு செல்ல புதிதாக அமைக்கப்பட்ட  அந்த எக்ஸ்பிரஸ் வே  பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்பட்டது.

மலைகளைக் குடைந்து பெரிய பெரிய சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்ட இந்த எக்ஸ்பிரஸ் வேதான் இந்தியாவின் முதல் ஆறு லைன் டோல் அதிவேக எக்ஸ்பிரஸ் வே .


Mumbai-Pune route to have 22-m-wide road tunnels by 2021

 இந்தியாவின்  பொருளாதாரத் தலைநகரான மும்பையினையும் மராட்டியத்தின்கலாசார மற்றும் கல்வித்  தலைநகரான புனேயினையும் இணைத்த இந்த அதிவேக எக்ஸ்பிரஸ் வே இந்தியச் சாலைகளில் பரபரப்பாக இருக்கும் ஆட்டோமொபில் போக்குவரத்தில் புதிய பாதுகாப்பு நியமங்களை அறிமுகம் செய்து ஆச்சர்யப்படுத்தியது. 94.5 கி.மீ. நீளமான இந்த அதிவேக எக்ஸ்பிரஸ் வேயில் பறக்கும் வாகனங்கள்,  சாயத்ரி மலைத்தொடரின் அழகிய காட்சிகளுடன் பயணித்து பல நீளமான அழகிய சுரங்கப்பாதைகள் வழியாக இரண்டே மணி நேரத்தில் மும்பையினை எட்டி விடுகிறது. (120 km வேகத்திற்கு அதிகம் செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு உள்ளது)அதற்கு முன் இருந்த போக்குவரத்து அமைப்பில் இந்தப் பயணம் 5 மணி நேரம் பிடித்ததாம்.

Mumbai-Pune Expressway: A lopsided tale of two cities


காடுகளுக்குள் இருந்து தப்பித்து வரும்  விலங்குகள் பாதையில் வந்து விடாமல் இருக்க ஒட்டு மொத்த தூரமான 94.5 கி.மீ.க்கும் ஒரே நீளமான பாதுகாப்பு முள்கம்பி வேலி அமைத்துள்ளார்கள். 

கொங்கண் ரெயில்வே உதவியுடன் மொத்தம் 5724 meter நீளத்திற்கு ஒளி வெள்ளத்தில் மிதக்கும் ஆறு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.


Comments