காண - தொலை 15

 குருக்ஷேத்திரம்..

அந்த இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் பல வருடங்களாக இருந்து வந்தது  வம்சாவளி உரிமை பிரச்னை மற்றும் நிலப் பிரச்சினை.பாண்டவர்கள் ஒரு தரப்பு. கவுரவர்கள் ஒரு தரப்பு.அது அஸ்தினாபுரத்தின் அரசவை. குரு மகாசபையில் ,  யாதவர்  தலைவனும் துவாரகை அரசனும் ஆன கிருஷ்ணன் ஒரு சமாதானத் தூதுவனாக  வந்திருக்கிறான். கிருஷ்ணன் பாண்டவர் தரப்பு நியாயம் சொல்ல வந்திருக்கிறான்.

 அவனது தீர்வு -ஒரு போர் தடுக்கப்பட வேண்டுமென்றால் இந்திரப் பிரஸ்தத்தை கவுரவர்கள் பாண்டவர்களுக்குத் திருப்பித் தந்து விட வேண்டும். கவுரவர தலைவனான துரியோதனன் ஒரு ஊசி முனை அளவு இடம் கூட பாண்டவர்களுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்று  தகராறு பண்ணுகிறான்.

கிருஷ்ணன் இறங்கி வருகிறார். ஒரு ஐந்து கிராமமாவது பாண்டவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வாதிட சினம் கொள்ளும் துரியோதனன் கிருஷ்ணனை சிறைப்பிடிக்குமாறு தன் காவலர்களுக்கு உத்தரவிட, வெறுத்துப் போய் கிருஷ்ணன் ,”போர் நடக்கும், நீ வீழ்வாய். பாஞ்சாலியை உன் தொடையில் உட்காரச் சொன்ன திமிருக்கு பீமன்  சபதப்படி  உன் தொடை கிழிக்கப்பட்டு நீ சாவாய்” என்று சபித்து விட்டு பாண்டவர் பாசறைக்கு திரும்பி விடுகிறார்.

காலாட்படையில் 109350 பேர், குதிரைப்படையில் . 65610 பேர், 21870 யானைகள், 21870 ரதங்கள் என்ற அளவில் இரு தரப்பும் மோதிக் கொண்ட அந்த பிரம்மாண்ட யுத்தம் குருக்ஷேத்திரம் என்ற இடத்தில 18 நாட்கள் நடந்ததும் , அதில் பாண்டவர்கள் வென்றதும் அனைவரும் அறிந்த ஒன்று.

அதிலும் தனது எதிர் தரப்பில் தனது குருவும் உறவினர்களும் இருப்பதைப் பார்த்தவுடன் போர் புரிய மனமின்றி அர்ஜுனன் தனது கை வில்லான காண்டிபத்தை கீழே போட்டு விட, கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் கீதை உபதேசிக்க , கொல்லும் தர்மம் சொல்லும் அந்த மற வரிகளை மனதில் கொள்ளும் அர்ஜுனன்,  மூர்க்கமாகப் போர் தொடர்ந்ததும்.. மஹா பாரதம்!

ஆதியில் 8,800 பாடல்கள் மட்டுமே கொண்டு “ஜய” என்று இருந்த அந்த காதை பின்னர் 24,000 பாடல்களாக பெருகிய போது “பாரதம்” என்று பெயரிடப்பட்டது. இறுதியில் இப்போது இருக்கும் ஒரு லட்சம் பாடல்கள் அதன் ரூபத்தை பிரம்மண்டமாக்கி பெயரும் “மஹா பாரதம்”  என்று ஆகி விட்டது.

வரலாற்றாசிரியர்கள் அப்படி ஒரு யுத்தம் நடந்த காலத்தை கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டில் என்று கருதுகிறார்கள். பவுராணிகர்கள் கி.மு. 3102 ல் நடந்தது என்றும் வேறு ஒரு தரப்பினர் கி.மு. 15 ம் நூற்றாண்டில் நடந்ததாகவும்  கருதுகிறார்கள்.

வழமை  போலவே எல்லா புராண ஸ்தலக் கதைகள் போலவே இங்கே குருஷேத்திரத்தின் ஸ்தல புராணக் கதைகளும் சுவராஸ்யம் நிறைந்தது. அதில் ஒன்று இங்கிருக்கும் ஜ்யோதிசர் எனுமிடத்தில் உள்ள ஒரு  ஆலமரம். 5000 வருடம் பழமையானது என்று சொல்லப்படும் இதன் அடியில் இருந்துதான் கிருஷ்ணன் பகவத் கீதை உபதேசித்தார் என்று ஒரு நம்பிக்கை.  அதே போல் இதன் அடியில் இருந்துதான் முனி மனு , தனது மனு ஸ்மிரிதிகளை எழுதினாராம். (அதுதாங்க இந்த வர்ணாசிரமப்படி நாலு டிசைனா மனிதர்களைப் பிரித்த மேட்டர்) ரிக் வேதம்,மற்றும் சாம வேதம்  எழுதக்  கூட இந்த மரத்தடிக்குதான் வந்தார்களாம். அதெல்லாம் விட, கிருஷ்ணன் துவாபர யுகம் முடிந்ததைக் குறிக்கும் விதமாக தனது அழிக்கும் சக்திகளைப் பூராவும் ஏவி விட்டதும் இந்த மரத்தடியில் இருந்துதானாம்.

அதேபோல் குருக்ஷேத்திரத்தின் மற்றுமொரு முக்கிய இடம் பிரம்ம சரோவர். இங்குதான் பிரமனின் ஆவணங்கள் எல்லாம்  பாதுகாக்கப் படுகிறதாம். நாகரிகத்தின் தொட்டில் எனப்படும் இங்கு ஒரு பெரிய யாகம் நடத்தி முடித்த பின்புதான் பிரம்மன் பிரபஞ்சம் படைக்கும் தொழிலை ஆரம்பித்தாராம்.

கி.பி. 11ம் நூற்றாண்டில்அல் பெருனியின் Kitab-ul-Hind’.என்ற நினைவுக் குறிப்புகளில் பிரம்மா சரோவர் குறிப்பிடப்படுகிறது. போரின் கடைசி நாளில்,  தோற்றுப் போன துரியோதனன் பீமனிடம் இருந்து தப்பிக்க இந்த ஆற்றின் அடியில் ஒளிந்து கொண்டதாக மகாபாரதம் குறிப்பிடுகிறது.

3600  அடி நீளமும் 1500 அடி அகலமும் கொண்ட இந்த குளம்.  நீள் சதுர வடிவத்தில் ,  மனிதர்கள் சமைத்த மிக நீண்ட குளம் என்னும் பெயருடன் வெகு தொலைவில் இருந்து வரும்  ஏராளமான பறவைகளுக்கு சரணாலயமாக திகழ்ந்து வருகிறது


Comments

  1. Arputham ayya ! Porin uthvehathaium kadavulin oliyayium pugai padangaludan alagaga eduthu koori uleer !! Jai shri krishna ji❤️🙏 bhramma ji❤️🙏 ungal peraium ipdi makkal kooruvar thodarnthu eludunga kalakunga !!! ❤️🙏 Modern ulagathu ilango adigaley ❤️😀🙏

    ReplyDelete

Post a Comment